சீக்கிரம் சரி பண்ணுங்கையா!.. வாக்கிங் போகணும்!..

0 1,803
Stalin trichy visit

திருச்சி. மார்ச்.22.  திருச்சி மாநகரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும், விரிவான நடைமேடைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்த நிலையில், திருச்சி தென்னுார் பகுதியில் மக்கள் நடைபயிற்சியோ அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென்றால் அண்ணா ஸ்டேடியத்தில் உள்ள மைதானத்திற்கோ அல்லது இரயில்வேக்குச் சொந்தமான கிரவுண்டிற்கோ சென்று தங்கள் பயிற்சிகளை செய்ய வேண்டிய நிலை இருந்தது.

இது மக்களுக்கு மிகவும் சிரமமாக இருந்த போது, இப்பகுதியில் நடைபயிற்சி பாதை அமைத்தது வரவேற்கத்தக்க விஷயமானது. இந்த நடைமேடை, சிறியவர் முதல் பெரியவர் வரையுள்ள அனைத்து வயதினரும் தங்கள் உடலினை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்கும், காலை, மாலை நேரங்களில் தங்கள் பொழுதுபோக்க ஏற்ற ஒரு இடமாகவும் இருந்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் நடைமேடையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சீரமைக்கவும், புதுப்பொலிவுடன் மாற்றுவதற்கான முனைப்பினை காட்டிய மாநகராட்சி, வெகு நாட்களாகியும் எந்தவித சீரமைப்பு பணியும் தொடங்காமல் அப்பணிகளுக்கான கட்டுமானப் பொருட்களை நடைபாதையில் போட்டு வைத்து சீரமைப்பு பணிகள் செய்வதில் காலதாமதம் ஏற்படுத்தியது.

இச்செயல் மக்களின் நடைபயிற்சிக்கு தடையாகவும், உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையிலும் இருந்த நிலையில், அப்பகுதியில் சீரமைப்பு பணியை விரைவாக செய்து தரும்படி, மாநகராட்சியில் புகார்கள் வந்ததால், நடைபாதை சீரமைக்கும் பணி வெகுநாட்களுக்கு பிறகு இன்று தொடங்கியுள்ளது.

இப்பணி தொடங்கியுள்ளதைக் கண்ட அப்பகுதி மக்கள் “ அப்பாடா ஒருவழியா சரி பண்ண ஆரம்பிச்சுட்டாங்கையா” என்றும், “குதிரை போல நாங்க ஓடணும் ஆம போல வேல செய்யாதீங்க” என்றும் பணியாளர்களைப் பார்த்து நகைப்புடன் கூறிச் செல்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.