கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் கதவணையை ஜூன் 26ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் கதவணை மற்றும் பாலத்தை தமிழக முதல்வர் வருகின்ற 26ம் தேதி திறந்து வைக்க உள்ளார் – திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேட்டி
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு – நான் திருச்சிக்கு தான் மந்திரி என்னிடம் திருச்சி கேள்வியை மட்டும் கேளுங்கள் என்றார் …
திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று ஆய்வு செய்தார்.
387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் ஏறத்தாழ 95% பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அமைச்சர் கே.என் நேரு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி,செளந்தர பாண்டியன்,ஸ்டாலின் குமார்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.
இதில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என் நேரு :
ஜூன் 26 தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலனை பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார்.
2018ம் ஆண்டு இந்த பாலம் கட்ட திட்டமிடப்பட்டு தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது – கலைஞர் மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப் பாதையாக இருக்கும் வகையில் கட்டினார் – ஆனால் இது குறுகளாக ஒரு வழிப்பாதையாக தான் உள்ளது.
அதே நேரம் இந்த பாலத்தில் மேலும் சில புதிய விஷயங்களை கொண்டுவர உள்ளோம் – அதை முதல்வர் தெரிவிப்பார்.