முதலமைச்சர் திருச்சி வருகை : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 905
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (21.02.2023)காலை 09.30 மணியளவில் விமானம் மூலம் .திருச்சிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளித்திட வேண்டுகிறேன்.
இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய, நகர, பேரூர் வட்டம் வார்டு கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நம்முடைய முதலமைச்சருக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்திட வேண்டுகிறேன் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.