எடமலைப்பட்டிபுதூரில் புதிய பள்ளிக் கட்டிடம் – அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
திருச்சி, அக்.22 திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ரூ.650 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடத்திற்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேர் இன்று அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பெருவணிக சமுதாயப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், நிருவாக பொறியாளர்கள் குமரேசன், பாலசுப்ரமணியன், உதவி ஆணையர்கள் சண்முகம், பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பரமணியன், மாவட்ட பிரமுகர் வைரமணி, மண்டல தலைவர் துர்காதேவி, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் முத்துசெல்வம் மற்றும் மாமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.