போதை பழக்கத்திற்கு எதிராக பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாநகர காவல் ஆணையர் விழிப்புணர்வு கூட்டம்

0 42
National

இளைஞர்களின் நலனை காக்க திருச்சி மாநகர பள்ளி மற்றும் கல்லூரி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆகியோர்களுடன் போதை பழக்கங்களுக்கு எதிரான
விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற பத்திரிக்கை செய்தி
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு..கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்தும், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இளைஞர்களின் நலனை காக்கும் பொருட்டு போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிராச்சாரம் நடத்தவும் காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
இன்று (04.08.22)-ந்தேதி திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் திருச்சி மாநகரத்தில் உள்ள 128 பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்களுடன் போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் தலைமையிடம் மற்றும் தெற்கு சரகம், காவல் உதவி ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் திரு.சுவாமி முத்தழகன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

Click the image to Chat on Whatsapp

இக்கூட்டத்தில் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பள்ளி பருவம் கல்வி கற்க மட்டுமல்ல, ஒழுக்கத்தை கடைபிடிக்கவும்தான். பள்ளி பருவத்தில் கவனச்சிதறல் கூடாது. போதை பழகத்ததை பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் உபயோகப்படுத்தாமல் இருக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க முடியாததால் போதைக்கு மாணவர்கள் அடிமையாகிறார்கள் ஆசிரியர்கள் அவர்களை நல்வழிபடுத்த வேண்டும். எல்லோரும் ஒன்றாக கூட்டு முயற்சி எடுத்து போதை இல்லா மாநகரமாக திருச்சியை மாற்ற உறுதிக்கொள்வோம் என தெரிவித்தார்கள்.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்கு பிரத்யோக வாட்ஸ் ஆப் 96262-73399 என்ற எண்ணிற்கும், காவல்துறை அவசர உதவி எண்களான 100, 1098 மற்றும் 14417 தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று “போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும், இளைஞர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!