லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

0 353
National

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 2007 ஆம் ஆண்டு அரசு மூலம் புதிய ஆட்டோ வாங்குவதற்கு தாட்கோ நிறுவனத்தின் மூலம் வங்கி கடன் பெற்றுள்ளார். தான் வாங்கிய ஆட்டோ கடனுக்கு 25000 மானியம் அரசால் வழங்கப் பட்டுள்ளது. மேற்படி மணிகண்டனுக்கு மானிய தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற்று தருவதற்காக மூவாயிரம் ரூபாய் லஞ்சமாக தாட்கோ அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பாலு என்பவர் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி திரு அம்பிகாபதி அவர்களிடம் புகார் அளித்ததின் பேரில் டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கையும் களவுமாக கைது செய்தனர். மேற்படி வழக்கினை தற்போதைய டிஎஸ்பி  மணிகண்டன்  தலைமையிலான குழுவினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதிமணி  மூலம் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதால் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு முடிவு பெற்றது. இதில் மேற்படி இளநிலை உதவியாளர் பாலுவின் மீதான குற்றம் நிரூபணம் ஆகி அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். பின் மேற்படி இளநிலை உதவியாளர் பாலுவை நீதிபதியின் உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!