அந்தநல்லூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அந்தநல்லூர் பகுதி. இந்த அந்தநல்லூர் யூனியன் ஆபீஸ் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆபத்தான வளைவு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணியர் நிழற்குடை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் வெயில் மழை காலங்களில் மிகவும் அவதியுறுகின்றனர்

மேலும் கனரக வாகனங்கள் வந்து நிற்கின்றன. ஆகையால் பேருந்தில் செல்வதற்காக மக்கள் ஆபத்தான சாலையில் நடுவில் நின்று பேருந்தில் ஏறி செல்ல நேரிடுகின்றன. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA