கனமழை பெய்யக்கூடும் என்பதால் கலெக்டரின் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்

0 367
Stalin trichy visit

வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டிருப்பதால் நேற்று முதல் திருச்சி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு;-
1)அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை பிளாஸ்டிக் பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
2)வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், உடைகளை உலர்த்த மின்கம்பிகளை உபயோகிகக்கூடாது.
3)தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பை கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ள வேண்டும். இதற்கு அலுவலர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

4)டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை பிளாஸ்டிக் பைகளில் வைத்து எடுத்துச் ல்ல ஏதுவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
5)நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டிவைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
6)மழைக்காலங்களில், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தனியாக வெளியில் செல்லாமல் தவிர்க்க வேண்டும்.
7)ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.

8)தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதைத்தவிர்க்க வேண்டும்.
9)நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே மாவட்ட கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்.1077-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.
10)இடி மற்றும் மின்னல் ஏற்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை கடைப்பிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.