பெரியார் உருவப்படத்திற்கு கலெக்டர் மரியாதை

0 722
Stalin trichy visit

தமிழக முதல்வர் தந்தை பெரியாரின் பிறந்த நாளினை சமூகநீதி நாளாக அறிவித்து அவரது பிறந்த நாளில் அனைத்து அரசு அலுவலர்களும், சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர் சு.சிவராசு மலர் தூவி மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியினை வாசித்திட அனைத்து அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழியினை மீண்டும் வாசித்து ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி ஜெயப்ரீத்தா, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர்கள் தமிழ்கனி, சிவசுப்பிரமணியம்பிள்ளை மற்றும் துணை கலெக்டர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.