சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 6ம் தேதி அன்று முதலமைச்சரால் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச் சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17ம் நாளை ஆண்டுதோறும் சமூக நீதி நாள் ஆகக் கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்.
அதன்படி திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் தலைமையில் தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு சமூக நீதி நாள் உறுதிமொழியை ஆணையர் வாசிக்க அதனை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜி.குமரேசன், உதவிஆணையர்கள் ச.நா.சண்முகம், செ.பிரபாகரன், எஸ்.திருஞானம் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.