தனியார் பேருந்து படியில் தொங்கி சென்ற கல்லூரி மாணவர்கள்..
படியில் தொங்கி சென்ற கல்லூரி மாணவர்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற தனியார் பேருந்து….நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு மணப்பாறை செல்லக்கூடிய திருச்சி வரை இந்த தனியார் பேருந்து தினமும் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு கல்லூரி,பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அலுவலகத்திற்கும் செல்லக்கூடியவர்கள் தினமும் 1000 மேற்பட்டோர் செல்வது வழக்கம் அதேபோல் நேற்று இந்த தனியார் பேருந்து படியில் தொங்கிய நிலையில் ஆபத்தையும் உணராமல் படியில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவ மாணவிகள் இதை கண்ட அந்த வழியில் சென்ற ஒருவர் தனது காரில் இருந்து செல்போன் மூலம் ஐந்து கிலோமீட்டர் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் மற்றும் பேஸ்புக் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை கண்டு சமூக ஆர்வலர் பலரும் இதுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதுமட்டுமின்றி காலை 7 மணிக்கு திருச்சி செல்வதற்கு அதிக பேருந்து அரசு அமைத்து தர வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்