“திருச்சி மாநகரில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்” கமிஷனர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு!
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரில் பணிபுரியும் 10 இன்ஸ்பெக்டர்களை அதிரடி மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோட்டை சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அரங்கநாதன் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். மாநகர நுண்ணறிவு பிரிவு பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் கோட்டை சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வேல்முருகன் தில்லைநகர் சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நிக்சன் பாலக்கரை இன்ஸ்பெக்டராகவும், பி.டி.டி.எஸ். இன்ஸ்பெக்டராக இருந்த சிவகுமார் கண்டோன்மெண்ட்
சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கண்டோன்மெண்ட் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சேரன் செசன்ஸ் கோர்ட் இன்ஸ்பெக்டராகவும், ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரான அறிவழகன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜேந்திரன் மாநகர நுண்ணறிவு பிரிவு பாதுகாப்பு இன்ஸ்பெக்டராகவும், தில்லைநகர் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சிந்துநதி மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த தங்கவேல் அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.