கொரோனா நிவாரண நிதியாக அமைச்சர் கே.என்.நேருவிடம் ரூ.75 ஆயிரம் வழங்க முடிவு

0 241
Stalin trichy visit

திருச்சி பெரிய கடைவீதியில் திருச்சி மாவட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு விற்பனையாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் அய்யாதுரை, செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ஜெயபால், கனகராஜ், லோகநாதன், சுப்பிரமணியன், சந்திரசேகரன், ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை கடைகள் முறையான அனுமதி பெற்று அரசு அறிவித்துள்ள நடைமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். கொரோனா தொற்று பரவாத வகையில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.

கொரோனா நிவாரண நிதியாக அமைச்சர் கே.என்.நேருவிடம் சங்கத்தின் சார்பில் ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து பட்டாசு கடைகளிலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக கடைபிடித்து, விழிப்புணர்வுடன் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.