சமுதாயத்திறன் பயிற்சி பள்ளி
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ்
சமுதாயத்திறன் பயிற்சி பள்ளி நடைபெற்றது
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கரட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான வீட்டு உபயோகப் பொருட்களை பழுது நீக்கும்
சுய தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது பயிற்சியில் கரட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
பயிற்சியில் வீட்டு உபயோகப் பொருள்களான ஃபேன். ஏசி மிக்சி. கிரைண்டர் போன்ற மின்சாதன பொருள்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குவது குறித்து விரிவான செய்முறை விளக்கத்தை பயிற்சியாளைர் பூபாலன்
செய்து காட்டினார் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திட்டத்தின் கீழ் பழுது நீக்கும் கருவிகள் வழங்கப்பட்டது.