தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வலியுறுத்தல்!
ஏ.ஐ.டி.யு.சி. ஊராட்சி தூய்மைப் பணியாளர் பாதுகாப்பு சங்கம் சோமரசம்பேட்டை கிளை கூட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் செயலாளர் தோழியர் நதியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தூய்மைப் பணியாளர் சங்க தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளருமான முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டட சங்க ஒன்றிய

பொருளாளர் முத்தழகு, தூய்மைப் பணியாளர் நாச்சிகுறிச்சி தலைவர் ஜெயபால், சோமரசம்பேட்டை துணைத் தலைவர் நதியா, பொருளாளர் உமாபதி, துணைச் செயலாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மார்ச் 28, 29 நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில்
அனைவரும் கலந்து கொள்வது, தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும். தூய்மைப் பணியாளருக்கு அடிப்படை சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் மாத மாதம் ரூ.6000 வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.