சிலம்பப் போட்டியில் பரிசு குவித்த மாணவர்கள்- எம்எல்ஏ இனிகோவிடம் வாழ்த்து

0 362
Stalin trichy visit

திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் நடத்திய 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் மாநில சிலம்ப போட்டியில் உலக சிலம்பம் இளைஞர் சம்மேளத்தின் சார்பாக இப்போட்டியில் பங்கு பெற்று தனித்திறமை மற்றும் கம்பு சன்டையில் வெற்றி வாகை சூடிய 30க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவ, மாணவிகள் தங்களது பதக்கங்கள் மற்றும் சான்றிதழுடன் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் வாழ்த்து பெற்றனர்.

 

மேலும் டெல்லியில் நடைபெற்ற காணொளி விருது வழங்கும் விழாவில் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற டாக்டர் விஜய்குமார் ஷா 2021 உலகளாவிய குழந்தை சாதனையாளர் விருதை இந்தியாவில் முதல் முறையாக சிலம்பத்தில் பல புதிய உலக சாதனைகள் மற்றும் சர்வதேச, தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்ப போட்டிகளில் வெற்றிகளை குவித்து இந்தியாவின் துணை ஜனாதிபதி அவர்களால் பாராட்டபட்ட 13 வயதேயான மோ.பி.சுகித்தா வழங்கியதை காண்பித்து வாழ்த்தும் பெற்றார்.

 

உடன் இந்திய சிலம்பக் கோர்வை தலைவர் இரா.மோகன், தமிழ்நாடு சிலம்பக் கோர்வை துணைத் தலைவர் என்.கே.ரவிச்சந்திரன், சிலம்ப மாஸ்டர் எம்.தர்மலிங்கம் மற்றும் பெற்றோர்கள் இருந்தனர்.

முன்னதாக இனிகோ இருதயராஜ் அவர்கள் வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் கொடுத்து பாராட்டியதுடன் சிலம்ப குழந்தைகளுக்கு வர இருக்கும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்.

Leave A Reply

Your email address will not be published.