ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தீவிரம்

0 301
Stalin trichy visit

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த அபு (வயது16) என்ற மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடமுருட்டி ஆற்றுப் பகுதியில் உள்ள கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகில் குளிக்க சென்றுள்ளார்.

நேற்று மாலை 5 மணி அளவில் அபு உள்ளிட்ட 4 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அபு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து உடனே தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி அபுவை தேடினர்.

இரவு வரை தேடியும் அபு கிடைக்காததால், இன்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.