தொடர்ந்து காவிரியில் கரை ஒதுங்கும் சடலங்கள்!
டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரியில் தண்ணீரானது பெருக்கெடுத்து வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு பத்து நாட்களுக்குள் காவிரி ஆற்றில் 3 சடலங்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக எரிந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்து வந்த நிலையில் ஸ்ரீரங்கம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக 50 வயது தக்க மூதாட்டியின் சடலத்தை திம்மராய சமுத்திரம் பகுதியில் கரை ஒதுங்கியதை அடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,

தற்போது அதே திம்மராய சமுத்திரப் பகுதி பொன்னி டெல்டா அருகே 55 வயது தக்க முதியவரின் சடலம் கரை ஒதுங்கி இருப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலையில் குறிப்பிட்ட சில நாட்களில் காவிரி ஆற்றில் தொடர்ந்து மூன்று சடலங்கள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…..https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA