“காலம் முழுவதும் பேரிகார்டு தான்” – காவிரி பாலத்தின் அவல நிலை!

0 776
Stalin trichy visit

இமயமலையை விட பழமையாக உள்ள மலைக்கோட்டை மாநகரயும், தீவு போல் அமைந்துள்ள அரங்கனின் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தையும் தரைவழி மார்க்கமாக இணைக்கும் ஒரு முக்கிய சாலையாக இருப்பது என்றால் அது இந்த காவேரி பாலம் சாலை தான்!!

பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் இந்த காவிரி ஆற்றின் நடுவில் கடந்த 1976ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலம். திருச்சி மக்களாகிய ஒவ்வொருவரும் மாலை வேளைகளில் இப்பாலத்தின் மேல் ஏறி நின்று காவிரியின் அழகை கண்டு களிப்பது, இளம் காற்று வீசும்போது மனநிம்மதியை தரும் ஒரு முக்கிய பாலமாக இருந்து வருகிறது.

 

சுமார் 45 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்… பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் சில விரிசல்களும், இடைவெளிகளும், பாலத்தின் மேல் உள்ள சாலையில் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதனால் இந்தப் பாலத்தின் மேல் கனரக வாகனங்கள் செல்லும்போது பாலமே குதித்து குதித்து விளையாடுகிறது, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தின் சாலையிலுள்ள குண்டு குழியில் பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளனர், அவசர காலங்களில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் கூட அப்பகுதியில் படாதபாடுபட்டு செல்கிறது.

கடந்த பல வருடங்களாகவே நாம் பார்க்கலாம் காவிரி பாலத்தில் பேரிகார்டு அமைக்கப்பட்டு எப்போதும் வேலைகள் நடந்துகொண்டே இருக்கும் ஒருபுறம் சாலைக்கு ஒட்டு போடுவதும், பாலத்தின் ஓரங்களில் டைல்ஸ் மாற்றுவதும், பேரிகார்கள் அமைத்து பல வருடங்களாக வேலை நடந்து வருகிறது. ஆனால் இந்த வேலைகளை எல்லாம் எதற்கு அவர்கள் செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது, நமக்கும் தெரியாது என்பதே நிதர்சனம்!

இந்த நிலையில் தற்போது பாலத்தின் நடுவில் பழுதடைந்து உள்ளதால் பேரிகார்டு போடப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து ஓட்டு போடுவது, வேலை செய்வதும் இருப்பதற்கு பதிலாக புதிய பாலத்தை அமைக்க வேண்டும் என பல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், சாலை பயனீட்டாளர்கள், பொதுமக்கள் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…..https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.