கொரொனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 234
Stalin trichy visit

கொரொனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்னூர், ஆல்செயின்ட்ஸ் நடுநிலைப் பள்ளி,
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம்,
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில்
கொரொனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தென்னூர், ஆல்செயின்ட்ஸ் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
தா.அலெக்ஸாண்டர் பால் தலைமை வகித்தார்
நூலகர் புகழேந்தி, ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்
பேசுகையில்,
கொரொனா பாதிப்பிலிருந்து நம்மையும் சமூகத்தையும் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும்.

மருத்துவர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். வெளியிடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்தல் வேண்டும்
சமூக இடைவெளியை பேண வேண்டும். கைகளை சுத்தமாக்க கிருமி நாசினி திரவங்களை பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சுத்தமான சமச்சீரான உணவு, நீர் எடுத்துகொண்டு உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை செய்து உடலையும் மனதையும் திடமாக வைத்து கொள்ள வேண்டும்.
மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தி கொள்ளவேண்டுமென எடுத்துக் கூறினார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.