மக்கள் பணியில் கவுன்சிலர் ந.செந்தில்!
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட அந்தோனியார் முதியோர் இல்லத்தை நிர்வகிக்கும் சிஸ்டர்கள் அழைத்ததின் பொருட்டு அங்கு சென்று அவர்கள் தங்களது சிரமத்தை சொன்னதின் பேரில் அவர்களுக்கு தேவையான மருந்துகள் வாங்க இனி முதியோர்கள்

மாதமாதம் மருத்துவமனைக்கு அலைய வேண்டாம் என்று முடிவு செய்து அந்த பணியினை இனி தானே முன்வந்து மருத்துகளை பெற்று தருகிறேன் என்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் முதியோர் இல்ல சிஸ்டர்களிடம் எடுத்துரைத்தார். மேலும் தனது வார்டுக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடை கட்டுமான பணிகள் தேவைப்படுவதால் அதனை ஆய்வு செய்து அந்த பணியினை சீர் செய்தார். மேலும் காலி இடங்களில் முளைத்துள்ள முட்புதர்களை கற்றும் பணியினை மேற்கொண்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.