வாடிக்கையாளர் பணத்தை கையாடல் செய்த போஸ்ட் மாஸ்டர் சஸ்பெண்ட்; போலீசில் புகார்!

0 320
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சங்கம்பட்டி அஞ்சலக கிளை உள்ளது. இங்கு போஸ்ட் மாஸ்டராக வைரிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த யசோதா 2019ம் ஆண்டு வேலை பார்த்தபோது சங்கம்பட்டியைச் சேர்ந்த வாடிக்கையாளர் சரவணன் ரூ.2,00,000 டெபா சிட் செய்ததாக தெரிகிறது.

இதனை அவருடைய கணக்கில் யசோதா செலுத்தாமல் கையாடல் செய்ததாகவும், சரவணன் பெயரில் போலி கணக்குப் புத்தகத்தை வழங்கியதையும் துறை ரீதியான தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு கையாடல் செய்தது உறுதியான பிறகு யசோதாவிடமிருந்து ரூ.2,00,000 திரும்ப பெற்ற அஞ்சல் துறை அலுவலகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுபற்றி நேற்று முன்தினம் துறையூர் மேற்கு உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளரான அமர்நாத், துறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரைப்பெற்ற குற்றப்பிரிவு எஸ்ஐ கலைச்செல்வன் அரசையும், வாடிக்கையாளரையும் நம்பிக்கை மோசடி செய்த யசோதா மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். துறை ரீதியாக விசாரணைக்குப் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு மேல் யசோதா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மீது அஞ்சல் துறை சார்பில் போலீசில் புகார் கொடுத்து குற்ற வழக்கு செய்திருப்பது பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.