“43வது வார்டு பகுதியில் தூய்மை பணி” கவுன்சிலர் செந்தில் ஆய்வு!
திருச்சி மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆயில் மில் மெயின் சாலையில் பூங்கா ஓரங்களில் உள்ள புதர்களை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்தார். தொடர்ந்து கம்பர் தெருவில் மின்சாரமின்றி இருப்பதை தகவலறிந்து நேரில் சென்று

உடனடியாக மின் ஊழியர்களை அழைத்து அதனை சரி செய்தவுடன் அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் முட்புதர்கள் நிறைந்து கிடப்பதை ஆய்வு செய்து அவற்றை பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்துகொள்ளவும்…https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH