கஞ்சா விற்ற தம்பதி கைது

0 301
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 47). இவர் தனது மனைவி மீராதேவி யுடன் அதே பகுதியில் உள்ள ஒரு வணிகவளாகம் அருகே கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவி இரண்டு பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.