காணாமல் போன குழந்தைகளை உடனடியாக கண்டுபிடித்த காவல்துறைக்கு சி.பி.ஐ(எம்.எல்) கட்சி பாராட்டு

0 348
Stalin trichy visit

திருச்சி, டிச.26  திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மணப்பாறை உட்கோட்ட காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட மொண்டிப்பட்டி கிராமம் களத்துபட்டியில்
24-12 2025 அன்று மாலை 3 மணியில் இருந்து 2 ஆண் குழந்தைகளை காணவில்லை.

இது சமந்தமாக குழந்தைகளின் பெற்றோர் பெருமாள் அவர்கள் மணப்பாறை
காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்  காவ்யா  உத்தரவின் பேரில் அவர்களது தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜசேர்வை மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அனைவரும் விடிய விடிய குழந்தைகளை தேடும் முயற்சியில் தீவிரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டனர், அதன் பின்பு அதிகாலை குழந்தை மீட்கபட்டது.

காவல்துறையினர் மீது சில நேரங்களில் அவப்பெயர் வந்தாலும் கூட  இயற்கை பேரிடர், விபத்து, குழந்தைகளை மீட்க கூடிய செயல்களில் மணப்பாறை காவல்துறையின் பணி சிறப்பானது காவல்துறை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர், காவல்துறையினருக்கு CPI(ML) கட்சி பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது

Leave A Reply

Your email address will not be published.