வீட்டின் முன் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த பெண் சாவு!

0 359
Stalin trichy visit

திருச்சி கே.கே.நகர் பழனிநகரை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மைதிலி(வயது 44). இவர் வீட்டின் முன்பகுதியில் சுத்தம் செய்தபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்துவிட்டார். அதில்

அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மைதிலி உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மைதிலியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.