திருச்சி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 29), கொண்டையம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (என்கிற) அரவிந்தன்(வயது 31). இருவரும் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில்
ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளதால் இருவர் மீதும் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவுபடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.