திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டு தயார்; டீன் வனிதா தகவல்

0 342
Stalin trichy visit

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பொது மக்கள் மத்தியில் எளிதில் பரவும் அபாயம் இருக்கிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் டெங்கு உற்பத்தி செய்யும் கொசுக்கள் அதிகமாக பரவி வரும் அபாயம் உள்ளது.

மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்கள் எப்.எம்.1 மற்றும் எப்.எம்.2 ஆகிய வார்டுகளில் உள்ள 30 படுக்கைகள் அனைத்திலும் கொசுவலைகள் பயன்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி அரச மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:-

மழை காலங்களில் பொது மக்கள் தங்களை தாமே தற்காத்து கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களை சுத்தப்படுத்த வேண்டும். கடி தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். மேலும் குழந்தைகளை சுகாதாரமான முறையில் பாதுகாக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் டெங்கு போன்ற நோய்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் கொசுக்களிடம் இருந்து நோயாளிகளை காப்பாற்றும் விதமாகவும் அரச வழிகாட்டுதலின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதி ஆகுபவர்களுக்காக தனியாக 2 வார்டுகள் முழுவதும் உள்ள படுக்கைகளில் கொசு வலை களை பயன்படுத்தி படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம்மாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.