குளங்களில் முட்செடிகளை அகற்றி நடைபாதை அமைக்கும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 322
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் மேலக்குளம், பிராட்டியூர் குளம் மற்றும் கள்ளிக்குடி குளங்களில் முட்செடிகளை அகற்றி தூர்வாரி நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இன்று (25.03.2023)  மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்இரா.அபிராமி, வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர்  ராஜரத்தினம், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.