டெல்டா மாவட்ட தடகள போட்டி – பதக்கங்களை குவித்த திருச்சி தேசிய கல்லூரி மாணவிகள்!
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கல்லூரி அளவிலான மாபெரும் தடகளப் போட்டியினை சமீபத்தில் நடத்தினர்.
இதில் திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் திருச்சி தேசிய கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பாக 5 மாணவிகள் பதக்கங்களை குவித்து உள்ளனர். உடற்கல்வியியல் துறை பயிலும் காவியா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், தேஜஸ்வானி 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் சோபனா என்ற மாணவி தங்க பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுவாதி என்ற மாணவி வெள்ளி பதக்கமும் வென்று உள்ளனர்.
பதக்கங்களை குவித்த மாணவிகளுக்கு திருச்சி தேசிய கல்லூரியின் துணை முதல்வரும் உடற்கல்வி துறை தலைவருமான பிரசன்ன பாலாஜி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo