அதிமுக பொன்விழா கொண்டாட்டம் – திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு
அதிமுக சார்பாக வருகின்ற 17 ம் தேதி பொன் விழா கொண்டாட்டம் குறித்து திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

“தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டப்பட்ட மாபெரும் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகளை நடந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்விழா காண இருக்கும் திருநாளை கொண்டாடும் விதமாக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணி சார்பில் ஆங்காங்கே அமைந்திருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மற்றும் அவர்களது படங்களுக்கு மாலை அணிவித்து அதே போல் ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைத்து விழாக் கோலம் பூண்டு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்