திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

0 455
Stalin trichy visit

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பிரோம்குமார், துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றியதற்கான செலவீன தொகை, மதிப்பூதியம் தொகையை உடனே வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக வருவாய் துறை அலுவலர்கள் போராட்ட அறிவிப்பு பட்டை அணிந்து மதியம் வரை அலுவலகத்தில் பணிபுரிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வருகிற 13, 14-ந் தேதி மற்றும் 27, 28-ந் தேதிகளில் நடக்க இருக்கும் தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.