ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை சார்பில் சிறப்பு கவாத்து

0 421
Stalin trichy visit

இந்தியா தனது 75வது சுதந்திர ஆண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறது. அந்த வகையில் திருச்சி காஜாமலை பகுதியிலுள்ள ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை ஐந்தாம் அணி சார்பில் “அசாடிகா அம்ரிட் மகத்சவ்” எனும் சிறப்பு கவாத்து  நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் மனிஷ் அகர்வால் ஜீப்பில் ஏறி ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின் கமெண்டிங்க அதிகாரி அஜய் ஜோதி மற்றும் ரயில்வே சிறப்புப் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.