எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அனுமதி மறுப்பு : விமான நிலைய அதிகாரிகளுடன் முன்னாள் அமைச்சர்கள் வாக்குவாதம்

0 155
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 11  திருச்சி விமான நிலையத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். வி.ஐ.பிக்கள் வரும் வழியாக வரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க செல்ல முன்னாள் எம்.பி குமார், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்கூட்டியே அனுமதி கடிதம் வழங்காததால் அவர்களை வி.ஐ.பி அறைக்குள் அனுமதிக்க முடியாது என விமான நிறைய அதிகாரிகள் தெரிவித்தனர் இதனால் அதிமுகவினர் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் நடைபெற்ற வாக்குவாதத்தை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளை வி.ஐ.பிகள் அறைக்குள் அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.