சென்னை மாநகராட்சி பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து 100 தூய்மைப்பணியாளர்கள், 8 மேற்பார்வையாளர்கள், 3 ஆய்வாளர்கள் சென்னைக்கு பஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்கள் சென்ற பஸ்சை, திருச்சி மாநகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமான் கொடியசைத்து அனுப்பிவைத்தார். நிகழ்ச்சியில் நகர்நல அதிகாரி டாக்டர் யாழினி, உதவி ஆணையர் (கணக்கு) திருஞானம், செயற்பொறியாளர் குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.