திருச்சி கிழக்கு தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு!

0 343
Stalin trichy visit

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்தது இதனால் பல குடியிருப்புகள் மற்றும் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 35, 35 மற்றும் 37 வார்டுகளில் வடகிழக்கு பருவ மழையினால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலையை அறிந்த கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அப்பகுதியில் சென்று ஆய்வு நடத்தினார்.

 

மேலும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிக நடைபாதைகள் மற்றும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.

இந்த ஆய்வுப் பணிகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், நிர்வாக பொறியாளர் சிவபாதம், ஆணையர் தயாநிதி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம்,ஷஉதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் ஜோதிபாசு, மற்றும் அரசு அலுவலர்கள், பகுதி கழக வட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.