ஜவுளி கடைக்கு சென்ற இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

0 401
Stalin trichy visit

திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பாரூக். இவருடைய மகள் பாத்திமா(21). இவர் திருச்சியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாயார் நூர், தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினார்.

ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கே.கே. நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் தேடி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.