பெண் பயனாளிகளுக்கு ரூ 8.20 லட்சம் கடனுதவி வழங்கல்

0 538
Stalin trichy visit

கோவண்டாகுறிச்சியில்டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம்
சுழல் நிதியிலிருந்து ரூ 8.20 லட்சம் கடன் உதவி வழங்கினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத் தில் உள்ள கோவண்டாகுறிச்சி மற்றும் மேலரசூர் பகுதியில் டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் நீர் பிடிப்பு பகுதி பெண்கள் குழு கூட்டமைப்பில் உள்ள 30 பயனாளிகளுக்கு சுழல் நிதியிலிருந்து ரூ.8.20 லட்சம் கடன் உதவி வழங்கினர்.

டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் கோவண்டாகுறிச்சி மற்றும் மேலரசூர் நீர் பிடிப்பு பகுதி பெண்கள் குழு கூட்டமைப்பில் உள்ள 30 பயனாளிகளுக்குசுழல் நிதியிலிருந்து ரூ. 8.20 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் பல்வேறு தொழில் செய்து வருமானம் ஈட்டக்கூடிய வகையில் கடன் உதவி வழங்கப்பட்டது. இவ்விழாவில் டால்மியா சிமெண்ட் பாரத் லிமிடெட் மெக்கானிக்கல் துறை துணை பொது மேலாளர் தலைவர் மொய்தீன் குட்டி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலை வழங்கினார் மேலும் டால்மியா பாரத் பவுண்டேசன் மேலாளர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் டால்மியா பாரத் பவுண்டேஷன் அலுவலர்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.