மாவட்ட ஆட்சியர் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஏப்.13 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு முசிறி ஒன்றியம், திண்ணக்கோணம் ஊராட்சியில் கருப்புக்கோவில் கொட்டம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் சமத்துவநாள உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் முசிறி ஒன்றியக்குழுத் தலைவர் மாலா ராமச்சந்திரன், திண்ணக்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், ராஜ்மோகன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.