நுகர்பொருள் வாணிப கிடங்கில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அதவத்தூரிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வளாகக் கிடங்கில் உணவுப் பொருட்களின் இருப்பு விவரம், பொருட்களின் தரம், அரிசியின் ஈரப்பதம், நிறம் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கிடங்கு வளாகத்தை சுத்தமாக பராமரிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சுமித்ரா, தரக்கட்டுப்பாட்டு மேலாளர் வனிதாமணி, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.