அதிக வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, பிப். 17 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுகளில் உள்ள ஒரே அமைவிடத்தில் அதிக வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 14 மையங்களில் உள்ள வாக்குச்சாவடி மைய கட்டிடங்களின் உறுதிதன்மை, அடிப்படை வசதிகள், வாக்காளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீனிவாசன், ஜெயந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் உள்ளனர்.