கொள்ளிடத்தில் நீர் வரத்து அதிகரிப்பு தாழ்வான பகுதிகளில் நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி, வாழவந்தபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்தினை நேற்று நள்ளிரவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் பார்வையிட்டு அலுவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிப்பு டன் பணியாற்றிடவும் உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி மக்களை பாதுகாப்பு நடவடிக்கையாக, பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களுக்கு உணவினை வழங்கி , பாதுகாப்புடன் கண்காணித்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.