கூழையாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 44
National

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், ஆலங்குடி மகாஜனம் ஊராட்சிக்குட்பட்ட கே.வி.பேட்டை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து அதன் காரணமாக, கூழையாற்றில் தண்ணீர் மிகுந்து செல்வதையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார்,
நேற்று நள்ளிரவில் அப்பகுதியினைப் பார்வையிட்டு, அலுவலர்கள் கண்காணிப்புடன் பணியாற்றிட‌ உத்தரவிட்டார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக, சர்ச்சில் தங்க வைக்கப்பட்டுள்ள இப்பகுதி மக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடி, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கிடும்படி கேட்டுக் கொண்டார். இம்மக்களுக்கு உணவினை வழங்கிட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!