தி.மு.க. அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 229
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23  திருச்சி பொன்மலை அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை திரு வி க திடலில் திமுக அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது இதனை கண்டித்தும், நியாயவிலை கடைகளில் பாமாயில், பருப்பு முறையாக வழங்கப்படாததை கண்டித்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
அதன் அடிப்படையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்மலை அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை திரு.வி.க திடலில் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தின் திமுக அரசை கண்டித்தும், கையில் பதாகைகள் ஏந்தியும் கண்டன கோஷம் எழுப்பினர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி, பகுதி செயலாளர்கள் பாலசுப்ரமணியம், தண்டபாணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்தி, மற்றும் லால்குடி, மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.