தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டின் இரு சக்கர வாகன பேரணி
தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டுக்கான ஆயத்த பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை இளைஞரணி நிர்வாகிகள் மூலம் நடத்தி வருகிறார்.
இதன் அடுத்த கட்டமாக இப்போது இளைஞரணி நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இருசக்கர வாகன பிரசாரத்தை கன்னியாகுமரியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இருசக்கர வாகன பிரசார தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.