திமுகவின் 100 நாள் சாதனை – திருச்சியில் துண்டுபிரசுரங்கள் வழங்கிய அமைச்சர்!

0 586
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கவின் சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கி துண்டுப் பிரசுரத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார் ‌

தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையம் முதல் வி. என் நகர் பகுதி வரை நடந்து சென்று பொதுமக்களை, வியாபாரிகள் மற்றும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பயணிகளை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். நிறைவேற்றப்பட்ட சாதனைகள், கொரோனா விற்கான நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கியது, மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டத்தை அறிவித்தது, பத்திரிக்கை ஊடகவியலாளர்களை முன்களப்பணியாளர்கள் அறிவித்தது, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக ஆக்கியது, செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தது என இப்படி 100க்கு மேற்பட்ட நூறுநாள் சாதனைகளை நிறைவேற்றிய திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என் சேகரன், மாவட்ட பொருளாளர் என் கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன், பாலக்கரை பகுதி கழக செயலாளர் ராஜசேகர் மற்றும் மாவட்ட பகுதி கிளை கழகங்களின் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.