“உன் போக்குல நீ போன… அது போக்குல ஃபைன் போடும் போலீஸ் கேமரா” – திருச்சி மக்களே இனியாவது விதிமுறையை கடைபிடிங்க….!

0 1,404
Stalin trichy visit

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு காவல்துறையினரும் குற்றங்களை தடுக்க நவீன யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் சாலை விதிமீறல்கள் மற்றும் சோதனை செய்யவும், அபராதம் விதிக்கவும் என பில் போட்டுக் கொடுத்தனர். அடுத்தகட்டமாக வாகனங்களை மறித்து விதிமீறல்களை ஈடுபடுபவர்களுக்கு ஆன்லைன் முறையில் பில் அனுப்பி வந்தனர். இதையும் தாண்டி தற்போது டிஜிட்டல் முறையில் (ஏ.என்.பி.ஆர் )கேமராவால் புகைப்படம் எடுத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக அபராதம் விதிக்கும் புதிய முறை தற்போது திருச்சியில் அமலாக உள்ளது.

இந்த ஏ.என்.பி.ஆர் கேமரா என்றால் என்ன?

இப்போது ஏ. என்.பி.ஆர் எனப்படும் கேமராக்கள் குறிப்பாக மாநகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் கூட இதுவும் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர பகுதிகளில் பொறுத்தவரை குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இந்த ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தலைமை தபால் நிலையம், பஞ்சப்பூர் செக்போஸ்ட், கரூர் பைபாஸ் ரோடு உள்ளிட்ட 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கருவி மூலம் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், எவ்வளவு வேகமாக சென்றாலும் துல்லியமாக அடையாளம் கண்டு விதிமீறல்களை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகைப்படமாக அனுப்பும் வல்லமை கொண்டது.

காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து என்ஐசி அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படும் விதிமுறை மீறல்கள் குறித்த புகைப்படங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபராதம் குறித்த விவரங்கள் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படும் இந்த புதிய முறை இன்னும் 20 நாட்களில் முழுமையாக திருச்சி மாநகரில் செயல்பட உள்ளது. எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதி முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய தருணம் இது.

“திருச்சி மாநகர் முழுவதும் ஏ.என்.பி.ஆர் வாகன சோதனை திட்டம் அமலுக்கு வருகிறது. இந்த போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்” என்று மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு கூறியுள்ளார்.

காவல்துறை தான் மறிக்கவில்லையே, ஹெல்மட் போடாவிட்டால் என்ன என அலட்சியமாக திரிபவர்களுக்கு கைபேசியில் காவல்துறை தற்போது தக்க பாடம் புகட்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் இனிமேலும் அஜாக்கிரதையாக இருந்தால் தினந்தோறும் அபராதம் ஆன்லைன் முறையில் அனுப்பி வைக்கப்படும். இனிமேலும் அலட்சியமாக திருச்சி மாநகரில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் தினந்தோறும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும் எனவே திருச்சி மாநகர காவல்துறை முன்னெடுப்பு என்பது மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…. https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.