ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை வகித்தார். உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலையில் வகித்தனர். சி.ஐ.டியு மாவட்ட செயலாளர் சிவராஜ், ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.என்.எல் கிருஷ்ணன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியதாவது அரசாணை எண் 152-ஐ ரத்து செய், நிரந்தர பணிகளை அவுட்சோர்சிங் விடாதே, தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 630 மாவட்ட ஆட்சியர் 2 (D) 62, 01.10.2017 அன்று அறிவித்த படி தினக்கூலியை வழங்கிடு, டெங்கு ஊழியர்களை நிரந்தர படுத்திடு, தேர்தல் வாக்குறுதி படி தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திடுக என கோஷங்களை எழுப்பி கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரிகாலன், சிவலிங்கம், குருமூர்த்தி உள்ளிட்ட 30 பெண் ஊழியர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். முடிவில் ஊரக உள்ளாட்சித் துறை சங்க முசிறி கிளை பொறுப்பாளர் மணிகண்டன் அனைவருக்கு நன்றி கூறினார்.