வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை பறிமுதல் : 5 பேர் தப்பியோட்டம்
திருச்சி செப். 11 திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி அருகே சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (24) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 47 போதை மாத்திரைகள், ஊசி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ், சதாசிவம், லோகேஷ், செல்வா ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.