கொட்டி தீர்த்த கனமழையால் பெரியாறு கரை உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது

0 359
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கருமலை அருகே உள்ள வள்ளியப்பன் களம் என்ற கிராமத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் கண்ணூத்தில் இருந்து செல்லும் பெரியாறு கரை உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தது. தார்சாலையிலும் அரிப்பு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி விவசாய விளை நிலங்களிலும் மழை நீர் முழுவதுமாக சூழ்ந்து கொண்டது.

இச்சம்பவத்தை அறிந்த மருங்காபுரி வருவாய்த் துறையினர் மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக அங்கு சென்று உடைப்பு ஏற்பட்ட பெரியாறு கரையை சரி செய்யும் பணி செப்டம்பர் 25ம் தேதியான இன்றும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளிகளும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.